முதல் இஸ்லாமிய பெண் முதல்வர்; இளம் வயது முதல்வர்; அசாம் அரசியல் வரலாறு; இந்த தேர்தலில் வெற்றி யாருக்கு..?
Assam Political History
கடந்த 2016 தேர்தலில் அசாமில் வெற்றியீட்டிய பாஜக 2021 தேர்தலிலும் பாஜவே வென்றது. தற்போது தொடர்ந்து 03-வது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டும் நிலையில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது.
அதாவது, நாட்டின் சுதந்திரத்திற்குப் பின் பிற இந்திய மாநிலங்களைப்போலவே அஸாமிலும் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது. இங்கு 1952, 57, 62, 67, 72 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே தொடர்ந்து வெற்றிபெற்றது. அதன்பின்னர் 1978-இல் முதன்முதலாக அஸாமில் காங்கிரஸ் அல்லாத அரசு அமைந்தது. தொடர்ந்து நெருக்கடி நிலைக்குப் பின் நடைபெற்ற தேர்தலில் ஜனதா கட்சி வெற்றிபெற்றது. ஆனால் 02 ஆண்டுகளில் 02 முதல்வர்கள் பதவியேற்ற நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.
1980-இல் காங்கிரஸ் கட்சியின் அன்வாரா தைமூர் முதல்வரானார். இந்தியாவில் முதல்வர் பதவியில் அமர்ந்த முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றவர்.
ஆனாலும், அவரது ஆட்சியும் 200 நாட்களில் கவிழ்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. பின்னர் 1985-இல் நடைபெற்ற தேர்தலில் அசாம் கணபரிஷத் வெற்றிபெற்றது. அப்போது 33 வயதான பிரஃபுல்ல குமார் மொகந்தா முதல்வர் ஆனார். இதன் மூலம் இந்தியாவிலேயே மிக இளம் வயதில் முதல்வரானவர் என்ற பிரஃபுல்ல குமார் மொகந்தாவின் சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.
கடந்த 2001 இல் காங்கிரஸ் கட்சியின் தருண் கொகோய் அஸாம் முதல்வரானதோடு,தொடர்ந்து 15 ஆண்டுகளும் இவரே முதல்வராக நீடித்தார். அஸாமின் நீண்டகால முதல்வர் என்ற பெருமையையும் பெற்றார். இந்நிலையில், இவரது மகன் கவுரவ் கொகோய்தான் அசாமில் தற்போது காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக கருதப்படுகிறரார்.
முன்னதாக அசாமில் 2016-இல் நடைபெற்ற தேர்தலில் பாஜக கால்பதித்தது. பின்னர் 2021 தேர்தலிலும் பாஜவே வென்று ஆட்சியை கைப்பற்றியது. தற்போது தொடர்ந்து 03வது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டும் நிலையில் 15ஆணடுகளுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது.