இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம்.. பிரியங்கா காந்தி அறிவிப்பு.!
Assam Election Campaign Priyanka Gandhi Speech 2 March 2021
நாங்கள் மாதாமாதம் இல்லத்தரசிகளுக்கு ரூ.2 ஆயிரம் பணம் வழங்குவோம் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றவுள்ளது. அசாம் மாநிலத்தில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் வாக்குசேகரிப்புகளில் ஈடுபட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி இரண்டு நாட்கள் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இன்று தேஜப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட பிரியங்கா காந்தி, சிறப்புரையாற்றி வாக்கு சேகரித்தார்.

இதன்போது, " நாங்கள் மாதாமாதம் இல்லத்தரசிகளுக்கு ரூ.2 ஆயிரம் பணம் வழங்குவோம் என்றும், தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் பெண்களுக்கு தினக்கூலியாக ரூ.365 நிர்ணயம் செய்யப்படும் என்றும், மாநிலம் முழுவதும் ஐந்து இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். இது தேர்தல் வாக்குறுதி கிடையாது. உத்திரவாதம் " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Assam Election Campaign Priyanka Gandhi Speech 2 March 2021