அசாம் : காட்டு யானை தாக்கி ராணுவ வீரர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


அசாமின் கவுகாத்தியில் உள்ள நரேங்கி ராணுவ முகாம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அசாம் மாநிலம் குவஹாத்தி நகரின் கிழக்குப் பகுதியில் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகே உள்ள நரேங்கி ராணுவ முகாம் பகுதிக்கு நேற்று முன்தின மாலை காட்டு யானை ஒன்று வந்துள்ளது. அப்பொழுது பணியில் இருந்த ராணுவ வீரர் ஒருவரை காட்டு யானை காலால் மிதித்து தாக்கியுள்ளது. இதில் ஒரு ராணுவ வீரர் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து பலத்த காயமடைந்த ராணுவ வீரர் சிகிச்சைக்காக உடனடியாக குவாஹாட்டி பாசிஸ்தாவில் உள்ள இராணுவ அடிப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்துள்ளார். மேலும் உயிரிழந்த ராணுவ வீரர் திமாபூரை சேர்ந்த கம்லியோங் காப் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Army soldier killed in elephant attack in Assam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->