ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ராணுவ தலைமை தளபதி முதல்முறையாக சியாச்சின் பயணம்..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி இந்திய ராணுவம் வெற்றி பெற்றது. இந்நிலையில், முதல்முறையாக ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி சியாச்சின் சென்றுள்ளார். அங்கு, 18 ஜம்மு காஷ்மீர் ரைபிள் படை பிரிவு வீரர்களுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார்.

உலகின் மிக உயர்ந்த மற்றும் அதிக குளிர் நிறைந்த போர் முனையாக காணப்படும் சியாச்சின் பனிமலை, ஏறக்குறைய 23 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. 75 கி.மீ நீளமும், 10 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவும் கொண்டது.

இங்கு பட்டாலியனில் அவர் ஒரு இளம் அதிகாரியாக தனது ராணுவ வாழ்க்கையைத் தொடங்கியதோடு, பின்னர் இதன் தளபதியாகவும் பணியாற்றி உள்ளார். அங்கு அவர் தளபதியாக இருந்த போது, தனக்கு கீழ் பணியாற்றிய 07 ஜூனியர் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். 

இது குறித்து இந்திய ராணுவம் விடுத்துள்ள பதிவில், 'ஒரு நெகிழ்ச்சியான தருணம். ராணுவ தலைமை தளபதி தனது பழைய படைவீரர்களுடன் நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.' எனக் குறிப்பிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Army Chief visits Siachen for the first time after Operation Sindoor


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->