உஷார்! சிலிண்டர் வாங்க போறீங்களா? - ஓடிபி (OTP) கட்டாயம்...புதிய விதிமுறை அமலுக்கு வந்தது...! - Seithipunal
Seithipunal


நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கல், கள்ளச்சந்தை விற்பனை போன்ற முறைகேடுகளை கட்டுப்படுத்தவும், உண்மையான பயனாளிகளுக்கு தடை இல்லாமல் சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

அந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, வரும் மே 1-ஆம் தேதி முதல் முக்கிய மாற்றம் ஒன்றை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, ஓடிபி அடிப்படையிலான சிலிண்டர் விநியோக முறையை முழுமையாக, அதாவது 100 சதவீதம் செயல்படுத்த அரசும் விநியோக நிறுவனங்களும் ஒருமித்த முடிவு எடுத்துள்ளன.

இனி, சிலிண்டர் முன்பதிவு செய்யும் தருணத்திலேயே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு 4 இலக்க ஓடிபி எண் அனுப்பப்படும். பின்னர், சிலிண்டர் வீட்டிற்கு விநியோகிக்கப்படும் நேரத்தில் அந்த ஓடிபியை வாடிக்கையாளர் வழங்கினால்தான் சிலிண்டர் கையளிக்கப்படும்.

ஓடிபி சரிபார்ப்பு நிறைவேற்றப்பட்ட பிறகே, விநியோகம் செய்யப்பட்டதாக நிறுவனத்தின் கணினி அமைப்பில் பதிவு செய்யப்படும்.இந்த புதிய நடைமுறை மூலம் சிலிண்டர் திருட்டு, கள்ளச்சந்தை விற்பனை போன்ற குற்றச்செயல்கள் கணிசமாக கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த திட்டம் நாட்டில் சுமார் 94 சதவீதம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வரும் மே மாதம் முதல் முழுமையாக செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Are you going buy cylinder OTP mandatory New rules have come into effect


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->