பாகிஸ்தானுடன் மீண்டும் சண்டையா? ராணுவத்துக்கு அதிகபட்ச உத்தரவு போட்ட முப்படை தளபதி!
Are we going to fight again with Pakistan? The army's maximum directive has been given by the three chiefs
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த ராணுவ நடவடிக்கை இன்னும் முடியவில்லை என்றும் ராணுவம் அதிகபட்ச தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் முப்படை தலைமை தளபதி கூறினார்.
காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடந்த ராணுவ தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பெரிய இழப்பை சந்தித்தனர்.இதையடுத்து சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.இந்த காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக பாகிஸ்தானுக்கு செல்லக்கூடிய சிந்து நதி நீர் நிறுத்துவைக்கப்படுள்ளது.
இந்தநிலையில் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த ராணுவ நடவடிக்கை இன்னும் முடியவில்லை என முப்படை தலைைம தளபதி அனில் சவுகான் கூறியுள்ளார். டெல்லியில் நடந்த ராணுவம் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது அவர் கூறியதாவது:மேலும் வீரர்கள் வீரத்திலும், அறிவிலும் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் ,நமது தயார் நிலை அளவு 365 நாட்களும், 24 மணி நேரமும் அதிகபட்சமாக இருக்க வேண்டும்.
ஒரு போரில் 2-ம் இடம் பெறுபவர்கள் யாரும் இல்லை. எந்த ராணுவமும் தொடர்ந்து உஷாராகவும், தயார் நிலையை பேணுபவர்களாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக ஆபரேஷன் சிந்தூரை எடுத்துக்கொண்டால், அது தற்போதும் தொடர்கிறது.
ஒன்றிணைந்த ஒரு போர் சூழலில் ஒரு எதிர்கால போர் வீரன் என்பவன் ஒரு தகவல் வீரன், தொழில்நுட்ப வீரன், நிபுணத்துவ வீரன் என ஒரு கலவையாக இருக்க வேண்டும்.இவ்வாறு அனில் சவுகான் கூறினார்.
English Summary
Are we going to fight again with Pakistan? The army's maximum directive has been given by the three chiefs