அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்? மாயா ரோபோவின் அசரவைக்கும் பதில்!
AP Assembly Election Maya Roba
ஆந்திர மாநிலத்தின் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்பது குறித்து கேள்விக்கு பிரபல மாயா ரோபோவின் பதில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 13ம் தேதி மக்களவைப் பொதுத் தேர்தலுடன் ஆந்திரா மாநிலத்திற்கு சட்டமன்ற பொதுத் தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அம்மாநில மக்களிடையே எழுந்துள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு, இவர் தான் ஆட்சியை பிடிப்பார் என்று யாராலும் கணித்து கூற முடியாத நிலை அங்கு நிலவி வருகிறது. மேலும் மாநிலத்தில் பாஜக கணிசமான வாக்குகளை பெற்று, கணிசமான தொகுதிகளில் வெற்றியையும் பதிவு செய்யும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், துபாயில் உள்ள ஆப் பியூச்சர் மியூசியத்தில் மாயா என்ற பிரபல ரோபோவிடம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், ஆந்திர மாநிலத்தில் ஆட்சி அமைக்க போவது யார் என்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்வியைக் கேட்டதும் சற்று நேரம் அமைதியாக இருந்த அந்த ரோபோ, "பதில் தெரிந்தாலும் சொல்ல முடியாது" என்று தனது கைகளை அசைத்து அந்த கேள்விக்கு பதில் அளித்தது.
இது குறித்த காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஆந்திர மாநில மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் எது சம்பந்தமான கேள்விகள் கேட்டாலும் ஒரு கணம் கூட யோசிக்காமல் பதில் சொல்லும் இந்த ரோபோ, ஆந்திர மாநிலத்தில் ஆட்சி அமைக்க போவது யார் என்று கேள்விக்கு மட்டும் சற்று நேரம் எடுத்து பதில் கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்தியாவின் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, அந்த ரோபோ அடுத்து யார் ஆட்சி அமைக்கப் போகிறார் என்ற பதில் தெரிந்தும், என்னால் சொல்ல முடியாது என்று அசத்தலாக பதில் தெரிவித்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
AP Assembly Election Maya Roba