ஓரினச்சேர்க்கை காதல்.. திருநங்கையாக மாறிய ஆசிரியர்.. காதலனால் நிகழ்ந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


ஆசிரியர் ஒருவர் தன் காதலனுக்காக ஆணாக இருந்து திருநங்கையாக மாறிய நிலையில், அந்த காதலனாலையே அவர் ஏமாற்றப்பட்டதால் போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் இருக்கும் தனியார் டீச்சர் ட்ரைனிங் கல்லூரி ஒன்றில் ஆலோகம் பவன் மற்றும் நாகேஸ்வரராவ் இருவரும் கடந்த 2019 -ல் பி எட் படித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. 

ஓரினச்சேர்க்கையாளர்களான இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ முடிவெடுத்துள்ளனர். எனவே, பவன் திருநங்கையாக மாற வேண்டுமென முடிவெடுத்த இருவரும் டெல்லிக்கு சென்று பவனுக்கு அது குறித்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். 

அதன் பின்னர் பிரம்மராம்பா என்ற பெயரில் பவன் வலம் வர ஆரம்பித்தார். ஆனால், திருமண ஆசை காட்டி அறுவை சிகிச்சை மேற்கொள்ள வைத்த நாகேஸ்வரராவ் பிரம்மராம்பாவை ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி இருக்கிறார். எனவே, ஏமாற்றப்பட்ட பிரம்மராம்பா என்கிற பவன் தற்போது காவல் நிலையத்தில் தனது காதலன் மீது புகார் கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anthra gay lover getting cheated by his boy Friend


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->