சந்திப்பை சுவாரஸ்யமாக்க 'உயரமான ஸ்வீடிஷ் blonde பெண்ணுக்கு ஏற்பாடு செய்யுங்கள்'; வெளியாகியுள்ள எப்ஸ்டீனுடன் அனில் அம்பானி உரையாடல்..?
Anil Ambanis conversation with Epstein about arranging for a tall Swedish blonde woman
உலகம் முழுவதும் தற்போது பேசும் பொருளாகியுள்ள முக்கிய விஷயம் ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்தான். இந்த கோப்புகளில் படி, சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்காக தனி தீவு ஒன்றையே எப்ஸ்டீன் வைத்திருந்துள்ளமை உலகை உலுக்கியுள்ளது.
ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் அவரது முக்கிய வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக நீதிமன்ற உத்தரவின்படி இந்த வெளியிடப்பட்டு வருகின்றன.
அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில், இந்திய தொழிலதிபர் அனில் அம்பானிக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையில் இருந்த தொடர்பு குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இந்த கோப்புகளை ஆய்வு செய்த ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த 2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் இருவருக்கும் இடையே நடந்த மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம் பெற்றுள்ளன.
அந்த உரையாடல்களில் இடம் பெறுள்ளதாவது:
எப்ஸ்டீனை சந்திக்க வேண்டும் என அவருக்கு மெசேஜ் அனுப்பிய அனில் அம்பானி, "உங்களது ஆலோசனை என்ன?" என்று கேட்டுள்ளார். அதற்கு ஜெப்ரி எப்ஸ்டீன், சந்திப்பை இன்னும் சுவாரஸ்யமாக்க உயரமான 'ஸ்வீடிஷ் blonde பெண்' ஒருவரைச் சேர்த்துக்கொள்ளலாம் என்று பதிலளித்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள அனில் அம்பானி, அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனையடுத்து, மற்றொரு மின்னஞ்சலில், ஜூன் 2017-இல் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்திற்கு முன்னதாக, அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகளை ஆகியோரைச் சந்திக்க எப்ஸ்டீனின் உதவியை அனில் அம்பானி நாடியுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், கடந்த, 2019 மே மாதம், அனில் அம்பானி நியூயார்க்கில் உள்ள எப்ஸ்டீனின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளதாக கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்ஸ்டீனனுடன் மற்றொரு உரையாடலில் 'ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜான்சன்'தனக்கு பிடித்த நடிகை என்றும் அனில் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தகவல்கள் குறித்து கருத்து தெரிவிக்க அனில் அம்பானியின் தரப்பு மறுத்துவிட்ட நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம், எப்ஸ்டீனின் இந்த ஆவணங்களை குற்றவாளியின் ஆதாரமற்ற உளறல்கள் என்று கூறி நிராகரித்துள்ளது. கடந்த 2019 ஆகஸ்டில் குழந்தை கடத்தல் வழக்கில் கைதான எப்ஸ்டீன் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Anil Ambanis conversation with Epstein about arranging for a tall Swedish blonde woman