செம்மரம் கடத்தி வருகையில் ஏற்பட்ட விபத்து.. அரங்கேறிய சோகம்..! - Seithipunal
Seithipunal


ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கடப்பா விமான நிலையம் அருகே டீசல் டேங்கர் லாரி மற்றும் டாடா சுமோ வாகனம் மோதி விபத்திற்குள்ளாகியது. இந்த விபத்தில் லாரியில் இருந்த டீசல் சுமோவின் மீது கொட்டியது. 

இதனையடுத்து இரண்டு வாகனமும் தீப்பிடித்து எரிய துவங்கிய நிலையில், இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 5 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். இந்த வாகனத்திற்கு பின்னால் வந்த காரும், விபத்திற்குள்ளாகி இருந்த காரின் மீது மோதியுள்ளது. 

அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்துகளில், கடைசி காரில் வந்த 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், வாகனத்தை சோதனை செய்கையில் செம்மரம் கடத்தப்பட்டது அம்பலமானது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andra Pradesh Kadapa Red Wood Semmaram Smuggling Car Accident


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal