வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் இரும்பு முள்வேலி! தீவிர பாதுகாப்பில் போலீசார்.!
Andhra polling machine center iron barbed
ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 13ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
தேர்தலின் போது பல்வேறு இடங்களில் வன்முறைகள் நடைபெற்றன. இந்நிலையில் பதிவான வாக்கு எந்திரங்கள் 33 மையங்களில் 350 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் துப்பாக்கி ஏந்திய ராணுவ படையினர், மத்திய ஆயுத படை போலீசார் உள்ளிடம் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் வெளி ஆட்கள் யாரும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்திற்குள் செல்லக் கூடாது என இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய துணை ராணுவ படையினர், மாநில ஆயுதப்படை போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Andhra polling machine center iron barbed