பெரும் அதிர்ச்சி வீடியோ! அரசுக் கல்லூரி மாணவனை தாக்கி, மின்சாரம் பாய்ச்சி ராகிங்!
Andhra Government College ragging Viral Video
ஆந்திராவின் பலநாடு மாவட்ட தச்சபள்ளி அரசு ஜூனியர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் ஒருவர் சீனியர்களால் கொடூரமாக ராகிங் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாணவர் மீது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் குழுவாக தாக்குதல் நடத்தி, மின்சார அதிர்ச்சி அளித்து துன்புறுத்தியுள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தை அவர்கள் வீடியோ பதிவு செய்து, ஜூனியர் மாணவருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
கல்லூரி மாணவரல்லாத ஒரு வெளி நபரும் இந்தத் தாக்குதலில் நேரடியாக ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பெரும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த கொடூர ராகிங் சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு மாணவர் சங்கங்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கல்வி நிறுவனங்களில் ராகிங்கை முற்றிலும் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்து எழுந்துள்ளது.
English Summary
Andhra Government College ragging Viral Video