கொலை வழக்கு குற்றவாளியான இந்தியருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது..!
An Indian convicted of murder has been hanged in Kuwait
கொலை வழக்கில் குற்றவாளியான இந்தியர் ஒருவருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தின் கேடா மாவட்டத்தின் கபாட்வான்ஜ் பகுதியை சேர்ந்தவர் முஸ்தாகிம் பதியாரா, 38 வயது. இவர் பஹ்ரைன், துபாயில் சமையல் பணியில் ஈடுபட்டு வந்தவர். ராஜஸ்தானை சேர்ந்த தம்பதியினர் இவரை, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு குவைத்தில் உள்ள முஸ்தபா கான் மற்றும் ரெஹானா கான் வீட்டில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து, கடந்த 04 ஆண்டுகளுக்கு முன்னர், ரெஹானா கானுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், அவரை முஸ்தாஹிம் கொலை செய்துள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கின் தீர்ப்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு முஸ்தாஹிமிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி முஸ்தாஹிமுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்த நிலையில், விமானம் மூலம் முஸ்தாகிம் உடல் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
English Summary
An Indian convicted of murder has been hanged in Kuwait