370 க்கு மட்டும் ஓலமிட்டு வராதீர்கள்.! இறந்தவரின் குடும்பத்திற்கு ஒருவராவது பேசுகிறீர்களா?..! கொந்தளித்த அமித் ஷா.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மத்திய உள்துறை மந்திரியான அமத்தி ஷா., டெல்லி நகையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்றார். இந்த நிகழ்வில் பங்கேற்ற அமித் ஷா பேசியவாதவது., காஷ்மீரில் தற்போது அடக்குமுறைகளை நடப்பது போல எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தவறான தகவல்களை பதிவு செய்து வருகிறது. தடைகள் என்பது எங்கும் இல்லை.. உங்களின் எண்ணத்தில்தான் உள்ளது. 

தற்போது காஷ்மீரில் இருக்கும் 196 காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவானது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும்., அங்குள்ள பதற்றமான 8 காவல் நிலையத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த 370 ஆவது சட்டப்பிரிவினை நீக்கியதன் மூலமாக., இந்தியாவுடைய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடானது பலப்படுகிறது. 

இந்திய இராணுவம், இந்திய ராணுவம், indian army, indian army image, army,

இந்தியாவுடைய பிரதமர் நரேந்திர மோடியின் துணிச்சலான திறனால்., இன்னும் 5 முதல் 7 வருடத்தில் இந்தியாவின் முன்னேற்றமடைந்த பகுதியாக காஷ்மீரும் மாறும். ஜம்மு - காஷ்மீரில் பல வருடங்களாக நடைபெற்று வந்த வன்முறை மற்றும் மோதல்களில் சுமார் 41 ஆயிரத்து 800 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில்., இந்திய இராணுவ வீரர்களுக்கும் எதிரான மனித உரிமை மீறல் மற்றும் விதவைகளாகிய மனைவிகள்., அனாதையாக்கப்பட்ட நபர்கள் குறித்த கவலைகள் யாருக்கும் இல்லை. 

இந்த நிலையில்., சில நாட்களுக்கு கைபேசியின் தொடர்பு துண்டிக்கப்படும் பட்சத்தில்., மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக தொடர்ந்து ஓலமிட்டு ஒப்பாரி வைத்து வருகின்றனர். கைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டால்., எந்த விதத்தில் மனித உரிமை மீறலாக அமையும் என்பது தெரியவில்லை?.. கடந்த இரண்டே மாதங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

amith sha, அமித் ஷா, amith sha images, amith sha angry images,

காஷ்மீர் விவகாரம் மற்றும் 370 ஆவது சட்டப்பிரிவு தொடர்பாக ஏராளமான வதந்திகள் தொடர்ந்து பரவிக்கொண்டு வரும் நிலையில்., கடந்த 1947 ஆம் வருடத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. காஷ்மீர் தொடர்பாக சிதைக்கப்பட்ட வரலாறுகள் மட்டுமே மக்களிடம் முவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களின் தவறை பதிவு செய்யும் பொறுப்புகள் இருந்தும் கூட., உண்மைகள் மூடி வைக்கப்பட்டுள்ளது. சரியான வரலாறை மக்களுக்கு தெரியப்படுத்துவதே நல்ல ஆட்சியாளரின் கடமை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amith sha speech about kashmir 370 cancellation and army families


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->