அமெரிக்காவும் - இந்தியாவும் இணைந்து பாதுகாப்பு கட்டமைப்பில் செயலாற்றுவோம் - ராபர்ட் ஓ பிரையன்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம், ஜனவரி மாதம் 20 ஆம் தேதியுடன் அதிகாரபூர்வமாக வெளியேறவுள்ள நிலையில், அன்றைய தினம் ஜோ பைடன் தலைமையிலான அரசு நிர்வாகம் ஆட்சிக்கு வருகிறது. இந்த நிலையில், தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் ராபர்ட் ஓ பிரையன், பாதுகாப்பு தொடர்பான 10 பக்க ஆவணத்தை வெளியிட்டுள்ளார். 

இது குறித்த ஆவணத்தில், " இந்தோ - பசுபிக் பிராந்திய பகுதியில் அமெரிக்காவின் இராணுவ கட்டமைப்பு தொடர்பாக கூறப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் அமெரிக்கா, கடல்சார் பாதுகாப்பு மற்றும் தெற்காசிய, தென்கிழக்கு ஆசிய பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து வருகிறது. 

மேலும், சீனாவின் அத்துமீறல் தொடர்பான விஷயங்களை எதிர்கொள்ளும் திறன் இந்தியாவிற்கு அதிகரித்துள்ளது. இதனை இந்தியா பராமரித்தும் வருகிறது. தெற்காசிய பகுதிகளில் முதன்மையாக இருக்கும் இந்தியா, இந்திய பெருங்கடல் பகுதியை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தென்கிழக்கு ஆசிய பகுதியின் பாதுகாப்பையும் அதிகரிக்கிறது. 

பொருளாதார, தூதரக ஒத்துழைப்பில் அமெரிக்காவின் நட்பு பட்டியலில் இருந்து, பிற நாடுகளுடன் இணக்கத்தையும் இந்தியா ஏற்படுத்தி வருகிறது. வலுவாக இருக்கும் இந்தியா, தனது நட்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் சீனாவிற்கு சரியான எதிர்திசையில் இருந்து செயல்படுகிறது.

சீனாவின் இறையாண்மை பலவீனப்படுத்தும் செயல்களுக்கு அமெரிக்கா கடுமையான கண்டனம் தெரிவிக்கிறது. பாதுகாப்பு கட்டமைப்பு, பாதுகாப்பு கூட்டாளி என்று இந்தியாவின் உயர்வு மற்றும் திறன் விரிவு செயல் எங்களின் நோக்கம் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America India Friendship Better Robert O Brien Says


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal