அச்சரியம்! உணவை வீணாக்கினால் அபராதமா...? மகாராஷ்டிரா உணவகம் எடுத்த வித்தியாசமான முடிவு...!
Amazing there penalty wasting food strange decision made by Maharashtra restaurant
மகாராஷ்டிரா புனேவில் இருக்கிற ஒரு ஓட்டலில் யாராவது உணவை வீணாக்கினால், அபராதமாக அவர்கள் ரூ.20 செலுத்த வேண்டும் என்ற விதியை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இந்த புதுமையான முடிவை ஹொட்டேல் நடத்துபவர்கள் உணவு வீணாவதைத் தடுக்க எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்த செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவ, உணவை வீணாக்குவதற்கு அபராதம் விதித்து கையால் எழுதப்பட்ட உணவக அறிவிப்பு கார்டு புகைப்படத்துடன் வைரலாகி வருகிறது.இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் மக்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.
அதில்,திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளிலும் இதே போன்ற விதி இருந்தால் உணவு வீணாவதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்றும் உணவு வீணாவதைத் தடுப்பதற்கான ஒரு முன்னோக்கிய படி என்றும் தெரிவிக்கின்றனர்.
இதில் எதிர்மாறாக உணவை வீணாக்கக்கூடாது என்பது சரிதான். ஆனால் ஒருவர் எப்படி தங்களுக்குப் பிடிக்காத உணவை உண்ணும்படி கட்டாயப்படுத்த முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், வாடிக்கையாளர்கள் பொறுப்புடன் செயல்பட ஊக்குவிக்கும் எண்ணத்தில் உணவகம் இந்த முடிவை கையாலத்துணிந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
English Summary
Amazing there penalty wasting food strange decision made by Maharashtra restaurant