கோடை விடுமுறை; திருப்பதியில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்; தேவஸ்தானம் எடுத்துள்ள மாற்று ஏற்பாடுகள்..!
Alternative Arrangements Implemented by the Devasthanam Amidst Rising Pilgrim Crowds in Tirupati
கோடை காலத்தை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்கு சென்று வருகின்ற நிலையில், திருமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் இந்த கூட்டத்தை ஒழுங்குப்படுத்த திருப்பதி தேவஸ்தானம் இதற்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கும் வகையில் புதிய கொள்கையைச் செயல்படுத்தத் முடிவு செய்துள்ளது. அதன்படி கோடைக்காலத்தில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

குறிப்பாக, ஜுலை மாதம் வரை முக்கிய பிரமுகர்கள் சிபாரிசு கடிதம் மூலம் வழங்கப்படும் வி.ஐ.பி. தரிசனம் கடந்த மே-02 ஆம் தேதி முதல் முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவதையும் ரத்து செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதாவது, சர்வ தரிசன டோக்கன்களைக் பெற்று வரும் பக்தர்களால் நேரடியாக இலவச தரிசனத்தில் வரிசையில் வரும் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் வரை ஆகிறது. இதன் மூலம், இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதால் தரிசனம் விரைவாக நிறைவடையும். அதனால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு விரைவாக சாமி தரிசனம் செய்துகொள்ளலாம். அவ்வாறு ஒரு நாளைக்கு 80,000 பேருக்கு சாமி தரிசனம் செய்து வைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அத்துடன், தினமும் 02 முதல் 03 மணி நேரம் விஐபி தரிசனங்களுக்காக ஒதுக்கப்பட்டு வருகிறது. இது ரத்து செய்யப்பட்டால், அந்த நேரத்தில் 15 ஆயிரம் இலவச தரிசன வரிசையில் வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Alternative Arrangements Implemented by the Devasthanam Amidst Rising Pilgrim Crowds in Tirupati