உ.பி உள்ளாட்சி தேர்தல் : பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு ரத்து - உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்காக அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மாநில அரசு கடந்த 5-ந் தேதி இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிப்பாணை வெளியிட்டது.

மாநில அரசின் இந்த இடஒதுக்கீடு அறிவிப்பாணை உச்சநீதிமன்றம் தெரிவித்த வழிமுறைகளுக்கு எதிராக உள்ளதாகவும், உடனடியாக அந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் வழக்குகள் தொடரப்பட்டன. 

இந்நிலையில், நேற்று இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், ஓ.பி.சி.க்கு இடஒதுக்கீடு அளிக்கும் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன், ஜனவரி 31-ந் தேதிக்குள் தேர்தலை நடத்துமாறும் தெரிவித்துள்ளது. 

இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இடஒதுக்கீட்டுக்கு வழி கண்டுபிடித்த பிறகுதான் தேர்தல் நடத்துவோம் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

allagabad high court cancelled to obc quata reservation


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->