அகமதாபாத் விமான விபத்து: 'விமானி காரணமல்ல' - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
Air India plane crash ahmedabad Supreme Court
கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், விமானத்தில் இருந்த 241 பேர் உட்பட மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
விமானி மீதான சர்ச்சை:
இந்த விபத்துக்கு விமானி சுமித் சபர்வால், எரிபொருள் சுவிட்சை அணைத்ததே காரணம் எனச் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டது. விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையிலும், விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் இரு என்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு:
இந்த அறிக்கையை எதிர்த்து, விமானியின் தந்தை புஷ்கராஜ் சபர்வால் மற்றும் இந்திய விமானிகள் கூட்டமைப்பு (FIP) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுக்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், AAIB அறிக்கையுடன் உடன்படவில்லை என்றும், விமானியை மட்டும் குறை கூற முடியாது என்றும் தெரிவித்தது.
மேலும், இதுகுறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) நோட்டீஸ் அனுப்பியது.
மத்திய அரசின் பதில்:
இந்நிலையில், இன்றைய விசாரணையில் உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு, அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி காரணம் அல்ல என்று தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் மத்திய அரசு உறுதிப்படுத்தியது.
English Summary
Air India plane crash ahmedabad Supreme Court