ஆமதாபாத் விமான விபத்து: அவசர உதவி (ஹெல்ப்லைன்) எண்கள் வெளியீடு..!
Ahmedabad plane crash helpline numbers released
குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து 242 பயணிகளுடன் ஏர் ருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்டு சென்ற 05 நிமிடங்களில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அத்துடன், விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்த மருத்துவக்கல்லுாரி விடுதி, வீடுகளில் இருந்த பலரும், படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் மருத்துவ மாணவர்கள் 05 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த விமான விபத்தைத் தொடர்ந்து நடக்கும் மீட்புப் பணிகளில் இந்திய ராணுவத்தினர் உதவி வருகின்றனர். குறித்த விமான விபத்தை தொடர்ந்து, சிவில் மருத்துவமனை அவசர மையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவலுக்கு தொடர்பு கொள்ள இரண்டு ஹெல்ப்லைன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
விபத்தை தொடர்ந்து, ஆமதாபாத் சிவில் மருத்துவமனை அதிர்ச்சி (அவசர) மையத்தில் நோயாளி தொடர்பான தகவலுக்கு தொடர்பு கொள்ள மருத்துவமனை நிர்வாகம், 6357373831, 6357373841 ஆகிய இரண்டு ஹெல்ப்லைன் எண்கள் வெளியிட்டுள்ளது.
English Summary
Ahmedabad plane crash helpline numbers released