மீண்டும் முழு ஊரடங்கு அமல்.. வெளியான அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, புதிய கட்டுப்பாடுகளை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 149 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் மொத்தம் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226 ஆக அதிகரித்துள்ளது என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனாவின் முதலாவது மற்றும் இரண்டாவது அலையின் போது தொற்று விகிதம் 15 நாட்கள் மற்றும் 8 முதல் 10 நாட்கள் ஒருமுறை இரட்டிப்பாகும். ஆனால் தற்போது 1 முதல் 2 தொற்று விகிதம்  இரட்டிப்பாவதால் கர்நாடக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், கர்நாடக மாநிலம் முழுவதும் அடுத்த 2 வாரங்களுக்கு பப்கள், கிளப்புகள், உணவகங்கள், பார்கள், ஹோட்டல்கள், திரையரங்குகள், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மற்றும் உள் அரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் முழு ஊரடங்கு அமல் படுத்துவது அரசு அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

again full lockdown in bengaluru


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->