வந்தே பாரத் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் – 7 வழித்தடங்களில் ரெயில்வே வாரியம் அறிவிப்பு
Additional coaches in Vande Bharat trains Railway Board announces on 7 routes
நாடு முழுவதும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்கள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதிவேக பயணம், நவீன வசதிகள், விமான சேவைக்கு இணையான கட்டமைப்பு போன்ற காரணங்களால் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சமீப காலமாக, “டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை, பெட்டிகள் குறைவாக உள்ளன” என்ற புகார்கள் பயணிகளிடமிருந்து அதிகம் எழுந்தன. அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ரெயில்வே வாரியம் முக்கிய முடிவெடுத்து உள்ளது.
இதுகுறித்து, ரெயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை செயல் இயக்குனர் திலீப் குமார் தெரிவித்ததாவது:“தற்போது, மங்களூரு சென்ட்ரல் – திருவனந்தபுரம் சென்ட்ரல், செகுந்தராபாத் – திருப்பதி, சென்னை எழும்பூர் – நெல்லை ஆகிய 3 வழித்தடங்களில் 16 பெட்டிகளுடன் இயங்கும் வந்தே பாரத் ரெயில்கள் விரைவில் 20 பெட்டிகளாக அதிகரிக்கப்படும்.
அதேபோல், மதுரை – பெங்களூரு கான்ட், தியோகர் – வாரணாசி, ஹவுரா – ரூர்கேலா, இந்தூர் – நாக்பூர் ஆகிய 4 வழித்தடங்களில் தற்போது 8 பெட்டிகளுடன் இயங்கும் வந்தே பாரத் ரெயில்கள் 16 பெட்டிகளாக அதிகரிக்கப்படும்” என்றார்.
இந்த மாற்றத்தால், பயணிகள் வசதி மேலும் மேம்படும் என்றும், அதிகமானோருக்கு டிக்கெட் கிடைக்க வாய்ப்பு இருக்கும் என்றும் ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
English Summary
Additional coaches in Vande Bharat trains Railway Board announces on 7 routes