ராமர் கோவில் பிரதிஷ்டை - அயோத்திக்கு செல்லும் ரஜினி.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழ் வழங்கும் பணி கடந்த மாதம் முதல் ஆரம்பமாகியது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி புறப்படுகிறார். 

சென்னையில் இருந்து விமானம் மூலம் உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு செல்கிறார். ரஜினி செல்லும் அதே விமானத்தில் நடிகர் தனுஷும் லக்னோ வழியாக அயோத்திக்கு செல்கிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor rajini going to ayodhi for ramar temple kumbabhishegam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->