சீன வர்த்தகத்திற்கு ஆப்பு வைத்த மத்திய அரசு.. அடுத்த அதிரடியால் கதறல்.! - Seithipunal
Seithipunal


அத்தியாவசியம் இல்லாத பொருட்களின் இறக்குமதியை குறைக்கும் பொருட்டும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டும் மத்திய அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. 

கடந்த ஜூன் மாதத்தின் போது கார்கள், பேருந்துகள், லாரிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் புதிய நியூமாட்டிக் டயர்களை இறக்குமதி செய்ய தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு முன்னதாகவே தொலைக்காட்சி மற்றும் பாதுகாப்பு உபகரணம் போன்ற பல பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. 

இதனைத்தொடர்ந்து அடுத்தகட்டமாக ஏர் கண்டிஷனர் மற்றும் அதற்கான பாகங்கள் இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவெடுத்து இருந்தது. இதற்கான சுங்கவரி விதிப்பு மற்றும் தொழில்நுட்ப கட்டுப்பாடுகளை அதிகரித்தல் போன்ற பல வழிகளின் மூலமாக இறக்குமதியை ஒழுங்கப்படுத்த நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், தற்போது ஏர் கண்டிஷனர் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வெளியிட்டது. சீனா மற்றும் தாய்லாந்து நாட்டில் இருந்து 90 விழுக்காடு ஏர் கண்டிஷனர் இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசின் அறிவிப்பு அடுத்தடுத்த கதறலை சீனாவிற்கு ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AC Import cancelled by Central govt china feel sad


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->