பாகிஸ்தானில் இருந்து இந்தியா வரும் வீர தமிழன்! அவர் முதலில் சந்திக்கும் நபர் யார் தெரியுமா??
abinanthan will come india
நேற்று முன்தினம் பாகிஸ்தான் வெளியிட்ட அறிவிப்பில், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இரண்டு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தபட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். மிக் 21 பைசன் போர் விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் என்பவரை கைது செய்த வீடியோவையும் வெளியானது.
பாகிஸ்தான் எல்லையில் விழுந்த இந்திய விமானி அபிநந்தன் இன்று பிற்பகல் 12 மணிக்கு வாகா எல்லையில் ஒப்படைக்கப்படவுள்ளார் என கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் அபிநந்தனுக்கு உடல்நிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோதனையில் அபிநந்தன் முழு ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் அவரை வரவேற்பதற்காக முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங், பிரதமர் மோடியிடம் அனுமதி கோரியிருக்கிறார். இதனால் வாகா எல்லையில் பாதுக்காப்பு தீவிரப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து இந்தியாவிலும் அவருக்கு முழு மருத்துவப் பரிசோதனை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்தியா வந்ததும் அபிநந்தன் அவரது குடும்பத்தை சந்திக்கவுள்ளார். அதன்பிறகே அதிகாரிகளுடான ராணுவ ஆலோசனைக்கு அழைத்துச்செல்லப்படுவார் என தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்த இந்திய மக்களும் அபிநந்தனுக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
abinanthan will come india