பழைய வீடியோவை கிண்டியெடுத்த ஆம் ஆத்மி.. பதறிப்போன பாஜக.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் டெல்லி மாநிலத்தில் வரும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி மற்றும் பாரதிய ஜனதா கட்சி., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையேயான மும்முனை போட்டியாக உருவாகியுள்ளது. 

மேலும்., சமீபத்தில் வெளியான கருத்து கணிப்புகளின் மூலமாக ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற வகையில் இருந்த நிலையில்., பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சுமார் 7 மணிநேரம் தீவிர ஆலோசனை கூட்டத்தினை நடத்தினார். 

டெல்லி நகரின் சட்டசபை தொகுதிகளாக 70 இடத்தில் வேட்பாளர்களாக யாரை களமிறக்கலாம் என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நேரத்தில் பாஜகவினருக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக ஆம் ஆத்மி வீடியோ தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இந்த தொகுப்பில் வெளியான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில்., இது தொடர்பான வீடியோவில் டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி பாடலுக்கு நடனமாடுவது போன்று இருந்துள்ளது. இந்த வீடியோவிற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில வருடத்திற்கு முன்னதாக மனோஜ் திவாரி போஜ்புரி தொகுப்பிற்க்காக நடனம் ஆடியிருந்ததும்., இதனை ஆம் ஆத்மி கட்சியினர் தில்லுமுல்லு செய்து வீடியோவை பதிவு செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது. 

பாஜகவின் வெற்றியை தடுக்கவே இவ்வாறாக குறுக்கு வழியில் ஆம் ஆத்மி ஈடுபட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ள நிலையில்., இந்த விஷயம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

aam aadmi video trend about against bjp


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->