இரண்டு நாள் பயணமாக குஜராத் செல்லும் ஆம் ஆத்மீ கட்சி தலைவர்கள்..! - Seithipunal
Seithipunal


இரண்டு நாள் பயணமாக, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோர் குஜராத் சென்றுள்ளனர். 

குஜராத்திற்கு சென்ற இவர்கள் அங்கு நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு சட்டசபை தேர்தலுக்கு வாக்குகளை  சேகரித்து வருகின்றனர். இதனிடையே, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் இன்று குஜராத்தின் பாவ்நகரில் இளைஞர்களுடன் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட இருக்கின்றனர்.

 டெல்லி கெஜ்ரிவால் அரசில் துணை முதலமைச்சராக பதவி வகித்து வரும் மணீஷ் சிசோடியா, கல்வி, ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகளை கவனித்து வருகிறார். அங்கு மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தன.

 இதுகுறித்து  வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., மணீஷ் சிசோடியா, ஆயத்தீர்வை முன்னாள் ஆணையர் அரவா கோபி கிருஷ்ணா மற்றும் 2 அரசு அதிகாரிகளின் வீடுகள் உள்பட முப்பத்தொன்று இடங்களில் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தியது.

இந்த விவகாரத்தில் மணீஷ் சிசோடியா உள்பட பதினைந்து தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மத்திய பாஜக அரசுக்கும் டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கும் பெரும் மோதலாக மாறியது. 

இந்த நிலையில் பா.ஜ.க ஆளும் பகுதியான குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். இதுவரை அவர் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும்  ஐந்து முறை குஜராத்துக்கு சென்றுள்ளார். குஜராத் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் இதுவரை பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். 

இலவச மின்சாரம், மாதம் ரூ.மூவாயிரம் வேலையின்மை உதவித்தொகை, பத்து லட்சம் அரசு வேலைகள் மற்றும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் உதவித்தொகை, அனைவருக்கும் இலவச மற்றும் தரமான மருத்துவம் மற்றும் இலவச கல்வி என்று பல வாக்குறுதிகளை அளித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aam Aadmi Party leaders will go to Gujarat on a two-day trip..!


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->