'நான் ஒரு தாக்கூர்'; ஜாதி ஆணவத்தில் வாடிக்கையாளரை திட்டி, அடிக்க முயற்சிக்கும் வங்கி ஊழியர் வீடியோ வைரல்..!
A video of a bank employee abusing and attempting to assault a customer saying I am a Thakur has gone viral
HDFC வங்கி ஊழியர்,உயர் ஜாதி ஆணவத்தில் வாடிக்கையாளரை தகாத வார்த்தைகளால் திட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஆஸ்தா என்ற ஊழியர் அந்த வீடியோவில் தனது சாதியை சொல்லி, 'நான் ஒரு தாக்கூர்' என்று திரும்பத் திரும்பக் கூறி, 'என்னிடம் பிரச்சனை செய்யாதே' என்று எச்சரிப்பது மற்றும் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
தன்னுடன், பணிபுரியும் மற்ற ஊழியர்கள் தலையிட்டு அவரை அமைதிப்படுத்த முயற்சியில் ஈடுபட்டாலும், அதனைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து லேப்டாப்பை தூக்கி அடிக்கவும் ஆஸ்தா முயற்சித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் இந்த செயலிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஊழியருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும், தனியார் வங்கியிடம் இருந்து பொறுப்புக்கூறவும் பலரும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், எதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாக நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக HDFC வங்கி தரப்பிலும் எந்த விளக்கமும் அளிக்கபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
A video of a bank employee abusing and attempting to assault a customer saying I am a Thakur has gone viral