பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய நிபந்தனைகளை நிராகரித்துள்ள ஐசிசி..! - Seithipunal
Seithipunal


20 நாடுகள் பற்கேற்றுள்ள 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடாத்திரிக்கறது. அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டிகள் வருகிற 15-ந்தேதி கொழும்பில் மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், பங்களாதேஷ் விவகாரத்தில், அந்த அணிக்கு ஆதரவு தெரிவித்து, 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்,( ஐ.சி.சி.) எச்சரித்தது.  ஆனாலும் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.

வங்க தேசத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்தியாவுடன் விளையாட மறுக்கும் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் ஐ.சி.சி. பேச்சுவார்த்தை நடத்தியது. 

அப்போது இந்தியாவுடனான போட்டி புறக்கணிப்பு முடிவை கைவிட ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சில நிபந்தனையை விதித்த நிலையில், பாகிஸ்தான் நிபந்தனைகளில் முக்கியமானதை ஐசிசி நிராகரித்துள்ளது. 

அதன்படி, பாகிஸ்தான் முன்வைத்த நிபந்தனையும், அதற்கு ஐசிசி அளித்த விளக்கமும் பின்வருமாறு:-

பாகிஸ்தானின் நிபந்தனை 1: 

வங்கதேசத்திற்கு நிதி தொடர்பாக அபராதம் விதிக்கக் கூடாது. உலகக் கோப்பையில் விளையாடவில்லை என்றாலும், ஐசிசி-யின் முழு வருவாய் பகிர்வு கிடைக்க வேண்டும். 

ஐசிசி பதில்: இது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு. வங்கதேச கிரிக்கெட் போர்டு தண்டிக்கப்படாது.

பாகிஸ்தானின் நிபந்தனை 2:

வங்கதேசத்திற்கு அடுத்த சுற்று உலகக் கோப்பை அறிவிப்பில் கூடுதலாக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

ஐசிசி பதில்: 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை குறித்து பரிசீலனை செய்யப்படும்.

பாகிஸ்தானின் நிபந்தனை 3: 

இந்தியா- பாகிஸ்தான் இருதரப்பு தொடர்கள்.

ஐசிசி பதில்: இந்த கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இருதரப்பு தொடர் என்பது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விவகாரம். இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அடங்கும். 

பாகிஸ்தானின் நிபந்தனை 4:

இந்தியா- பாகிஸ்தான்- வங்கதேசம் இடையில் முத்தரப்பு தொடர் வேண்டும்.

ஐசிசி பதில்: சுற்றுப் பயணங்கள் இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. அது தலையிட மறுக்கிறோம்.

இதனையடுத்து, இன்னும் 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் பிரதமரிடம் பேசி முடிவு எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஐசிசி கால அவகாசம் வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The ICC has rejected the key conditions of the Pakistan Cricket Board


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->