தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் மாற்றம்..?
Has Kesava Vinayagam been removed from the post of Tamil Nadu BJP Organizational General Secretary
தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் மாற்றப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற பாஜக-ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கூட்டுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை தரப்பின் புகாரால் இந்த முடிவு எடுக்க காரணம் எனவும், தேர்தல் வரை அப்பதவியை கூட்டு தலைமையின் கீழ் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், அவருக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் புதிய பதவி வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கேசவ விநாயகம் 2015-ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Has Kesava Vinayagam been removed from the post of Tamil Nadu BJP Organizational General Secretary