சர்வதேச ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்: உலக வீரர்களை வீழ்த்தி தமிழக வீரர் சாதனை...! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெகிழ்ச்சி வாழ்த்து...!
International Skating Championship Tamil Nadu player beats world players achieve record Minister Adhav Arjuna wishes resilience
ஆஸ்திரியாவின் வோர்கல் நகரில் நடைபெற்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ‘ஐரோப்பிய ட்ராக் சீரிஸ் 2026’ ஸ்கேட்டிங் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஆனந்த்குமார் இரு பிரிவுகளில் தங்க வெற்றியைப் பதிவு செய்து நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
500 மீட்டர் ஸ்பிரின்ட் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் எலிமினேஷன் போட்டிகளில் அபார திறமையை வெளிப்படுத்திய ஆனந்த்குமார், வெற்றிக் கோப்பையை கைப்பற்றியதுடன், உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தையும் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனைக்கு பாராட்டு தெரிவித்து பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளப் பதிவில், “உலக அரங்கில் தமிழ்நாட்டின் திறமையை மீண்டும் ஒருமுறை உயர்த்திக் காட்டியுள்ள ஆனந்த்குமாருக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள்.
அவரது வெற்றி, விளையாட்டுத் துறையில் சாதிக்க விரும்பும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் உந்துசக்தியாக அமையும். தமிழ்நாட்டு இளைஞர்கள் உலகின் பல்வேறு போட்டி மேடைகளில் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
அவர்களின் கனவுகளையும் இலக்குகளையும் நனவாக்குவதற்காக தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
English Summary
International Skating Championship Tamil Nadu player beats world players achieve record Minister Adhav Arjuna wishes resilience