பிசிசிஐ-யின் ஒப்பந்தப் பட்டியலில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 'கிரேடு பி' பிரிவுக்கு மாற்றம்...!
Virat Kohli and Rohit Sharma moved to the Grade B category in the BCCIs contract list
பிசிசிஐ-யின் 2025-26 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்தப் பட்டியலில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 'கிரேடு பி' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஏ+ (Grade A+) பிரிவில் இருந்த இவர்கள், தற்போது 'பி' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதால் அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.7 கோடியிலிருந்து ரூ.3 கோடியாக குறைய உள்ளது. விராட் கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.
இவர்கள் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீரர்கள் அவர்களின் ஆட்டம் மற்றும் பங்களிப்பின் அடிப்படையில் Grade A, B மற்றும் C என பல்வேறு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்தவகையில், தற்போது மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடும் வீரர்களுக்கே 'ஏ' பிரிவில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
அதன்படி சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவர் மட்டுமே தற்போது உயரிய 'ஏ'பிரிவில் உள்ளனர். மகளிர் அணியில் ஜெமிமா ரோட்ரிகஸ், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் உள்ளனர். முன்னதாக தரவரிசையில் இருந்து 'A+' பிரிவு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Virat Kohli and Rohit Sharma moved to the Grade B category in the BCCIs contract list