அண்ணனுக்கு 5 கிலோவில் கடிதம் எழுதிய தங்கை.! உள்ளே என்ன இருந்தது தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள பீர்மேடு நகரில் வசித்து வருபவர் தாப் கிருஷ்ணபிரசாத். இவருடைய சகோதரி, கிருஷ்ணப்ரியா அரசுப் பொறியாளர். இவர் திருமணமாகி முண்டகாயம் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் சர்வதேச சகோதரர்கள் தினத்தில் ஒவ்வொரு வருடமும் தன் சகோதரர் பிரசாத்துக்கு கடிதம் எழுதுவாராம்.

 இருப்பினும், இந்த ஆண்டு வேலைப்பளுவின் காரணமாக சர்வதேச சகோதரர் தினத்தில் மே 24-ல் கிருஷ்ணப்ரியாவால் கடிதம் எழுத முடியவில்லை. இதனை தொடர்ந்து, தனக்கு ஓய்வு கிடைத்த மற்றொரு நாளில் அவர் தனது சகோதரனுக்கு கடிதம் எழுத ஆரம்பித்துள்ளார். இதற்கு 15 காகித ரோல்கள் வாங்கி, எழுத துவங்கினார். 

அத்துடன் பிறந்தது முதல் இருவருக்கும் ஏற்ப்பட்ட சண்டை, நெகிழ்ச்சி தருணங்கள் அனைத்தையும் நீண்ட கடிதமெழுதி 12 மணி நேரத்தில் எழுதி முடித்துள்ளார். பின், அந்தக் கடித பார்சலை அவரது அண்ணன் கிருஷ்ண பிரசாத்திற்குகு அனுப்பியுள்ளார். தங்கையிடமிருந்து வந்த பார்சலை கிருஷ்ண பிரசாத் பிரித்து பார்த்த போது அதில் ஏதோ பரிசு இருப்பதாக எண்ணினார். 

இருப்பினும், அதில் கடிதம் இருப்பதை கண்டு பிரித்து படித்து இன்ப அதிர்ச்சிக்குள்ளானார்.பின் தங்கை கிருஷ்ணப்ரியாவின் கடிதத்தை மேற்கு வங்க மாநிலத்திலுள்ள கொல்கத்தாவில் உள்ள 'யுனிவர்சல் ரிக்கார்ட் போரம்' என்ற நிறுவனத்துக்கு, கிருஷ்ண பிரசாத் அனுப்பியுள்ளார்.

சுமார் 5 கிலோ எடையும், 434 மீட்டர் நீளம் கொண்ட இந்த கடித்தை கண்ட அந்நிறுவனம் இது 'உலக சாதனை' என்று சான்றளித்துள்ளது. இதனை தொடர்ந்து, கிருஷ்ணப்ரியாவுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பல பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A sister 5 kg letter To brother in Kerala


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->