ஐயோ பாவம்!தனியார் பேருந்து மீது கார் மோதல்...! விபத்தில் 6 பேர் உயிரிழப்பு...!
A car collided with a private bus 6 people died accident
கர்நாடகாவிலுள்ள மனகுலி கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று இன்று காலை சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியனைத் தாண்டி மும்பையிலிருந்து வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் எதிர்பாராதவிதமாக மற்றொரு காரும் சிக்கியது. இந்த கோர விபத்தில், சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து விபத்து குறித்து காவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.இந்தத் தகவலறிந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவ இடத்தில் இறந்தவர்களின் உடலை மீட்ட காவலர்கள் பிரேத பரிசோதனைகாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள் இறந்தவர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
A car collided with a private bus 6 people died accident