ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் சடலமாக மீட்பு.. முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு.!
A 5-year-old boy fell into a borehole was rescued as a dead body
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் 4 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 6ம் தேதி மத்தியபிரதேச மாநிலம் பீட்டல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில் 5 வயது சிறுவன் தனது வீட்டிற்கு பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்தப் பகுதியில் சரியாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்தார். இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினரும் கடந்த 5 நாட்களாக சிறுவனை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு பிறகு சிறுவன் நேற்று மீட்கப்பட்டான். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிறுவனின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவனின் உடலுக்கு நிவாரணமாக 4 லட்சம் இழப்பீடு வழங்க மத்தியப் பிரதேச முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
A 5-year-old boy fell into a borehole was rescued as a dead body