டில்லியில் போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 92 பேர் கைது..!
92 illegal Bangladeshi immigrants arrested in Delhi with fake documents
போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 92 பேரை டெல்லியில் போலீசார் கைது செய்துள்ளனர். தென்மேற்கு டில்லியில் வங்கதேசத்தினர் சட்ட விரோதமாக குடியேறி வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, போலீசார் அதிரடி சோதனை நடத்தியத்தில், சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினரை போலீசார் கண்டறிந்தனர். அப்போது, அவர்களது ஆவணங்களை போலீசார் சரி பார்த்தத்தில், அவர்கள் போலி ஆவணங்களை தயாரித்து சட்டவிரோதமாக வசித்து வந்துள்ளனர். இவர்களிடம் இருந்து போலி ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதோடு, அவர்களை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சிலர் இந்தியா- வங்கதேச எல்லையில் உள்ள ஆறுகளைக் கடந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததை ஒப்புக்கொண்ட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை டில்லியில் சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 142 பேர் கைது செய்யப்பட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.
English Summary
92 illegal Bangladeshi immigrants arrested in Delhi with fake documents