பிறை தென்பட்டது, ஜூன் 07-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை- தலைமை காஜி அலுவலகம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


ஹஜ் பெருநாள் என்று அழைக்கப்படும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத். உலக அளவில்  இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை, அடுத்த மாதம் ஜூன் 07 (சனிக் கிழமை) கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அலுவலகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தலைமை காஜி அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: " சென்னையில் இன்று துல் ஹஜ் பிறை காணப்பட்டதை அடுத்து, நாளை துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் வரும் ஜூன் 07-ஆம் தேதி பக்ரீத் கொண்டாடப்படும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bakrit festival on June 07th


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->