மஹாராஷ்டிராவில் பெரும் சோகம்: தொழிற்சாலையில் தீ விபத்தில் குழந்தை, பெண்கள் உட்பட 08 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!
8 people including children and women tragically lost their lives in a fire at a factory in Maharashtra
மஹாராஷ்டிராவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 03 பெண்கள், ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தின் அகால்கோட் சாலையில் ஜவுளி தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை 03:45 தீவிபத்து ஏற்பட்டது. இதற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளர் ஹாஜி உஸ்மான் மன்சுரி மற்றும் அவரது 03 குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் ஒன்றரை வயது குழந்தையும், 03 பெண்கள் உட்பட 04 தொழிலாளர்களும் பலியாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து வந்த மீட்புப்படையினர், சுமார் 05 முதல் 06 மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
8 people including children and women tragically lost their lives in a fire at a factory in Maharashtra