நாடு முழுவதும் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நிறைவு!
7 legislative constituencies by election finished
நாடு முழுவதும் 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. ஜார்க்கண்ட் மாநிலம் தும்ரி தொகுதி, திரிபுரா மாநிலம் போக்ஸாநகர் மற்றும் தான்பூர் தொகுதிகள், உத்தர பிரதேச மாநிலம் கோஷி, உத்தரகண்ட் மாநிலம் பாகேஸ்வர், கேரள மாநிலம் புதுப்பள்ளி, மேற்குவங்க மாநிலம் துக்புரி ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த 7 சட்டசபை தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கிய தற்போது நிறைவடைந்துள்ளது.

மாலை 6.45 மணி நிலவரம் கேரளா மாநிலம் புதுப்பள்ளி தொகுதியில் 70.77% வாக்குகளும்,ஜார்க்கண்ட் மாநிலம் தும்ரி தொகுதியில் 63.75% வாக்குகளும், திரிபுரா மாநிலம் போக்ஸாநகர் பகுதியில் 86.34% வாக்குகளும், தான்பூர் தொகுதியில் 81.88% வாக்குகளும், உத்தரபிரதேசம் மாநிலம் கோஷி தொகுதியில் 49.42% வாக்குகளும், உத்திராகண்ட் மாநிலம் பாகேஸ்வர் தொகுதியில் 55.01% வாக்குகளும், மேற்குவங்க மாநிலம் துக்புரி தொகுதியில்74.35% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

இன்று பதிவாகியுள்ள வாக்குகள் வரும் 8ம் தேதி காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி அமைந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
7 legislative constituencies by election finished