மத்திய பிரதேசம் : ஜவகர்லால் நேரு சிலையை சேதப்படுத்திய 6 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் ஜவகர்லால் நேரு சிலையை சேதப்படுத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் சத்னாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள தாவரி சதுக்கத்தில் உள்ள ஜவஹர்லால் நேருவின் சிலையை ஒரு கும்பல் சேதப்படுத்தினர். கட்டைகள் மற்றும் சுத்தியலால் அவர்கள் சிலையை சேதப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலனது.

இதனையடுத்து 6 பேரை போலீசார் கைது செய்தனர். அந்த வீடியோ காட்சியில் காவி கொடிகளை ஏந்தியவாறு வந்த கும்பல் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இந்த நிலையில் நேரு சிலையை சேதப்படுத்தியதற்காகவும், சமூக சீர்கேட்டை ஏற்படுத்தியதற்காகவும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் இந்த விவகாரத்தை அரசு விசாரித்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 arrested for damaging Jawaharlal Nehru statue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->