கர்நாடகா: 2 கார்கள் மோதல் - தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 5 பேர் பலி, 5 பேர் படுகாயம் - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் காயம் அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் ஹாசனில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது திட்டனஒசஹள்ளி கேட் அருகே பெங்களூரு-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது நேற்றிரவு திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலை தடுப்பு சுவரை தாண்டி எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த பயங்கர விபத்தில் 2 கார்களின் முன்பகுதியும் அப்பளம் போல நொறுங்கியது. மேலும் இந்த விபத்தில் இரண்டு கார்களில் பயணம் செய்த 5 பேர் ஈடுபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். 5 பேர் பலத்த காயமைந்துள்ளனர்.

இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் காயமடைந்தவர்களை விட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த ஐந்து பேரின் உடல்கள் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஹாசனை சேர்ந்த சீனிவாச மூர்த்தி, அவரது மனைவி ஜெயந்தி, பிரபாகர், மற்றொரு காரில் சுற்றுலாவிற்கு வந்த தமிழகத்தை சேர்ந்த கிஷோர், கணேஷ் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 killed 5 injured in 2 cars collision in Karnataka


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->