துர்கா சிலைகளை கரைக்க முயன்ற 450 பேர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு.. 8 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கத்தில் துர்கா சிலைகளை கரைத்தபோது வெள்ளப்பெருக்கில் சிக்கிய 450 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி  மாவட்டத்தில் நவராத்திரி பண்டிகையையொட்டி துர்கா சிலைகள் கடந்த 5-ம் தேதி இரவில் அங்குள்ள மால் நதியில் கரைக்கப்பட்டன. இதில் சிலைகளை கரைக்க நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆற்றில் இறங்கியுள்ளனர்.

அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஏராளமான வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் சிலர் வெள்ளத்தில் மூழ்கினர். இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து உடனடியாக மீட்புக் குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் தீவிர பணியில் ஈடுபட்டனர். இதில் 8 பேர் வெள்ளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

கடந்த 2 நாட்களாக நடந்து வந்த இந்த மீட்பு பணிகளின் மூலம் சுமார் 450 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

450 people who tried to melt the Durga idols got stuck in the flood


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->