மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 40 வயது டீச்சர்..!
40-year-old teacher sexually harassed a student
மும்பையில் 40 வயது ஆசிரியை, 16 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் ஆங்கிலம் ஆசிரியையாக 40 வயதான ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். திருமணம் ஆகி குழந்தை உள்ள இவர் 2023-ஆம் ஆண்டு அதே பள்ளியில் படித்த 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவரை வேறு கண்நோடத்தில் பார்த்துள்ளார்.அப்போது பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடுவதற்கான குழுவை அமைக்கும் பணியில் ஆசிரியை அந்த மாணவனால் ஈர்க்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து 2024 ஜனவரி மாதம் அந்த மாணவவை நோக்கி பாலியல் சைகைகளும் காட்டியுள்ளார்.
மேலும், அந்த மாணவரிடம், ஆசிரியையின் நண்பர்கள் வயதான பெண்களுடன், இளம் பையன்கள் தொடர்பு வைத்துக் கொள்வது தற்போது சகஜம் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் ஆசிரியையை சந்திக்க மாணவன் முடிவு செய்துள்ளான.
இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக அந்த மாணவனை ஆசிரியை காரில் ஏற்றி ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றுபாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, மது அருந்த வைத்து, பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியிருக்கலாம் எனவும் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாணவனின் செயல்பாட்டில் சந்தேகம் வர, பெற்றோர் அவனிடம் விசாரித்தபோது, மாணவன் தனக்கு நடந்த அவல நிலையை விவரித்துள்ளான். ஆனால் நிலையை மேலும் மோசமானது. மாணவன் 12ஆம் வகுப்பு முடித்து வெளியேறிய பின்னரும், அந்த ஆசிரியை தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளார். அவருடைய வீட்டு வேலைக்காரர் மூலம் அந்த மாணவனை தொடர்பு கொண்டுள்ளார். இதனால் அந்த மாணவின் பெற்றோர், போலீசை அணுகி புகார் அளித்துள்ளனர்.இந்தநிலையில் போலீசார் போக்சோ சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
English Summary
40-year-old teacher sexually harassed a student