6 குழந்தைகள் உள்பட 8 பேரை கொன்ற 4 ஓநாய்கள்!
4 wolves killed 8 people including 6 children
கடந்த 2 மாதங்களாக உத்தர பிரதேசம் பஹ்ரைச் வனப்பகுதி வாழ் மக்கள் ஓநாய்களைக் கண்டு பயந்து கொண்டிருக்கின்றனர். இதன் காரணம் காட்டுக்குள் உலாவும் ஓநாய்கள் 45 நாட்களில் 6 குழந்தைகள் உள்பட 8 பேரை கடித்துக் குதறிக் கொன்றுவிட்டன. 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து உள்ளூர் மக்கள்
வனத்துறையிடம் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்தை பார்வையிட வனத்துறை அமைச்சர் அருண் குமார் சக்சேனாவுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். அமைச்சரின் மேற்பார்வையில் 25 வனத்துறை குழுக்கள், 72 மணி நேர தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஓநாய்களின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்ட 3 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை காலை 9:30 மணி அளவில் பஹ்ரைச் வனப்பகுதிக்கு உட்பட்டசிசியா கிராமத்தில் உள்ள கரும்புத்தோட்டத்தில் பதுங்கியிருந்த ஓநாய் ஒன்றை மயக்க மருந்து ஊசி செலுத்தி வலை வீசிப் பிடித்தனர். இதன் மூலம் கடந்த 2 மாதங்களில் 4 ஓநாய்களை வனத்துறையினர் பொறி வைத்து பிடித்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் ஆகாஷ்தீப் பதாவன் கூறுயது: ஓநாய்கள் தந்திரமானவை என்பதால் எங்கள் பொறியில் சிக்காமல் இருமுறை தப்பிவிட்டன. அதனால் இந்தமுறை கூடுதல் எச்சரிக்கையோடு செயல்பட்டோம். குறிப்பிட்ட இடத்தில் பாதுகாப்புப் படையினரின் கவனத்தைக் அதிகப்படுத்தி, ஓநாய்களைச் சிக்க வைக்கத் திட்டமிட்டோம். ஆடு ஒன்றை கட்டிப்போட்டு, மயக்க மருந்து ஊசிகள் பூட்டிய துப்பாக்கிகளுடன் தயார் நிலையில் பதுங்கி இருந்தோம். இடது கால் பாதத்தில் காயம்பட்ட ஒரு ஓநாய் நொண்டியடித்து ஆட்டை வேட்டையாட வந்தபோது மயக்க மருந்து செலுத்தி, அதை வலை வீசி பிடித்துவிட்டோம்.
பின்னர், அதனை அருகில் உள்ள சரணாலயத்தில் ஒப்படைத்துவிட்டு. கடந்த இரண்டு மாதங்களில் ஊரை அச்சுறுத்தி வந்த ஓநாய்களில் 4-ஐ பிடித்துவிட்டோம். மீதமுள்ள இரண்டு ஓநாய்களையும் தேடிப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என வன அலுவலர் ஆகாஷ்தீப் பதாவன் கூறினார்.
English Summary
4 wolves killed 8 people including 6 children