ஐதராபாத்தில் பயங்கர தீ விபத்து - 3 பேர் உடல் கருகி பலி.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜசாய்குடா, சாய் நகர் பகுதியில் உள்ள மரக்கடை குடோனில் இருந்த கியாஸ் சிலிண்டரில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி, மரக்கடையில் இருந்து கட்டைகள் அனைத்தும் தீப்பிடித்து முளமளவென எரிந்துள்ளது.

இதைத்தொடர்ந்து தீயானது அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்திற்கும் பரவியதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த, நரேஷ் அவரது மனைவி மற்றும் ஏழு வயது மகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மரக்கடையில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் டீசல் மற்றும் ஆயில்கள் வைக்கப்பட்டிருந்ததால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

இதையடுத்து இந்த தீ விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 of family killed in fire accident in Hyderabad


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->