சத்தீஸ்கரில் 27 நக்சல்கள் சுட்டுக் கொலை.!!
27 naxalites encounter in chateesgarh
நக்சல் ஆதிக்கம் அதிகம் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில், பாதுகாப்பு படையினர் நக்சல்களை ஒடுக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் காட்டுப்பகுதியில் நக்சல் இயக்கத்தினரின் தீவிர நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், நாராயண்பூர், தந்தேவாடா, பீஜாப்பூர் மற்றும் கொண்டாகாவ் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ரிசர்வ் காவல் படையினர் ஒருங்கிணைந்த முறையில் இன்று காலை முதல் சோதனை நடவடிக்கையைத் தொடங்கினர். அப்போது ஏற்பட்ட திடீர் மோதலில் குறைந்தது 27 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்குமுன்பு ஏப்ரல் 21 முதல் 21 நாட்கள் நீடித்த ‘பிளாக் ஃபாரஸ்ட்’ எனப்படும் பெரிய எதிர் நக்சல் நடவடிக்கை சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லை பகுதியில் நடைபெற்றது. அப்போது 31 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 16 வயதுடைய சிறுவன் ஒருவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
27 naxalites encounter in chateesgarh