25 நாட்கள் பாலியல் கொடுமை...! மாயமான 17 வயது சிறுமி மீட்பு – இளைஞர் கைது
25 days harassement 17 year old girl who went missing rescued young man arrested
உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த மாதம் 14ஆம் தேதி முதல் திடீரென மாயமானார். மகள் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, கடந்த 12ஆம் தேதி அந்த சிறுமியை போலீசார் மீட்டு கண்டுபிடித்தனர். தொடர்ந்து, சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன.
அதே பகுதியைச் சேர்ந்த பாபுராம் (21) என்பவர் சிறுமியை கடத்திச் சென்று, மராட்டிய மாநிலத்தின் மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் 25 நாட்களுக்கும் மேலாக சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்ததும், அந்த காலகட்டத்தில் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.
போலீசார் தன்னை தேடி வருவதை உணர்ந்த பாபுராம், பின்னர் சிறுமியை மீண்டும் உத்தரபிரதேசத்துக்கு அழைத்து வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த தகவல்களை சிறுமி தெளிவாக போலீசாரிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பாபுராம் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
25 days harassement 17 year old girl who went missing rescued young man arrested