பருத்தி காட்டில் மனித வேட்டை...! வேலைக்கு சென்ற பெண்ணை புலி தாக்கி பலி..! - Seithipunal
Seithipunal


மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டம் சிந்த்வாகி கிராமத்தைச் சேர்ந்த அருணா (45) நேற்று வழக்கம்போல் கிராமத்திற்கு அருகே உள்ள பருத்தி தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றார்.

வனப்பகுதியை ஒட்டிய அந்த தோட்டத்தில் பருத்தி பறித்துக் கொண்டிருந்தபோது, திடீரென காட்டுப் புலி ஒன்று தாக்கியதில் அருணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நீண்ட நேரமாகியும் அருணா வீடு திரும்பாததால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரை தேடிச் சென்றனர்.

அப்போது, பருத்தி தோட்டத்துக்குச் செல்லும் வழியில் உள்ள வனப்பகுதியில், புலி தாக்கிய நிலையில் அருணாவின் உடல் கிடப்பதை கண்ட அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசாரும் வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அருணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், புலி தாக்குதல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், அந்தப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Human hunt cotton field woman who went work attacked and killed by tiger


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->