தமிழகத்தில் பனிமூட்டம்-மழை கலந்த வானிலை...!- கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை...!
Foggy and rainy weather Tamil Nadu Rain alert coastal districts
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது,"கிழக்கு திசைக் காற்றின் வேகத்தில் ஏற்படும் மாறுபாடுகள் காரணமாக, தமிழகத்தில் வரும் நாட்களில் வானிலையில் சிறிய மாற்றங்கள் காணப்பட உள்ளன.
டிசம்பர் 14, 2025:
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அதேசமயம், அதிகாலை நேரங்களில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் தோன்ற வாய்ப்புள்ளது.

டிசம்பர் 15, 2025:
கடலோர தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை தொடரும். காலை நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டம் காணப்படலாம்.
டிசம்பர் 16, 2025:
கடலோர தமிழகத்தின் சில பகுதிகள், உள் தமிழகத்தின் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலை நிலவரம்:
டிசம்பர் 14 முதல் 16 வரை, தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏற்படாது. இருப்பினும், சில பகுதிகளில் வெப்பநிலை சற்று குறையும் வாய்ப்பு உள்ளது. இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக பதிவாகலாம்.
சென்னை மற்றும் புறநகர் வானிலை:
இன்று:
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் உருவாகலாம். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 29 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 முதல் 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
நாளை:
வானிலை இன்று போன்று தொடரும். ஓரளவு மேகமூட்டம் காணப்படும் நிலையில், அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் உருவாகலாம். வெப்பநிலையும் 29 / 20–21 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
English Summary
Foggy and rainy weather Tamil Nadu Rain alert coastal districts