கம்யூனிஸ்டுகளை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி தூக்கியெறிந்திருக்கின்றனர் கேரள மக்கள் - பாஜக! - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதா கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி போனது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை. 

தங்களின் துருப்பிடித்த கொள்கைகளால் மக்களை ஏமாற்றி, வஞ்சித்து வந்த கம்யூனிஸ்டுகளை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி தூக்கியெறிந்திருக்கின்றனர் கேரள மக்கள். பல்லாண்டு காலமாக கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் கோலோச்சிக்கொண்டிருந்த கம்யூனிஸ்ட்களை வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்திருக்கிறது பாஜக. 

ஒருபுறம் அதானி, அம்பானிகளை வசைபாடிக் கொண்டே, மறுபுறம் தாங்கள் ஆளும் கேரளாவில் அதே அதானி, அம்பானிகளுக்கு வெண்சாமரம் வீசுவது,  தொழிலாளர்களை சுரண்டுகிறார்கள் என்று புலம்பிக்கொண்டே, தங்கக் கடத்தலில் ஈடுபடுவது, இந்திய பங்கு சந்தையை விமர்சித்துக் கொண்டே, வெளிநாட்டு மசாலா பங்குகளை பெற்று பண மோசடியில் ஈடுபடுவது, ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டே, அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது, சமத்துவம் என்று பேசிக் கொண்டே, கொள்கை எதிரிகளை படுகொலைகள் பல செய்து வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றுவது என இரட்டை வேடம் போட்டு வந்த கம்யூனிஸ்டுகளின் கோர வெறியாட்டதிற்கு முடிவுரை எழுதியுள்ளனர் கேரள மக்கள்.

திரிபுரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களையடுத்து கொஞ்சநஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த கம்யூனிஸ்டுகளின் மூச்சுக் காற்றை, நச்சுக் காற்றை உள்ளாட்சி தேர்தலில் விரட்டியடித்து விட்டார்கள் கேரள மக்கள். 

இந்தியாவில் கம்யூனிஸம் எனும் நோய்க்கிருமி முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி இந்தியாவிற்கு, இந்தியர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உறுதி" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Narayanan kerala election result cpi cpim


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->